இலங்கை

இலங்கை : இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான வரி குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

செப்டெம்பர் 6ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ சீமெந்துக்கான செஸ் வரியை ஒரு ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ செயற்கை நிறம் அல்லது சாயம் பூசப்படாத வெள்ளை சிமெண்டிற்கு ரூ.5 ஆக இருந்த செஸ் வரி ரூ.4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

50 கிலோ மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செஸ் வரி ரூ.8ல் இருந்து ரூ.7 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்