இலங்கை

இலங்கை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் விமானிகள் பணிகுழாமினருடன் பயணித்த விசேட விமான சேவை!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவை கொழும்பிலிருந்து தாய்லாந்தின் பேங்கொக் நோக்கி முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் பணிகுழாமினருடனான விசேட விமானமொன்றை சேவையில் ஈடுபடுத்தியிருந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து காலை 7.30 க்கு புறப்பட்ட இந்த விமானம், பேங்கொக் சென்று மாலை 4.20 க்கு மீண்டும் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பெண்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்குக் கௌரவம் அளிக்கும் விதமாக, சர்வதேச மகளிர் தினத்தன்று ஸ்ரீலங்கன் விமான சேவை ஒவ்வொரு ஆண்டும் விசேட விமானத்தை இயக்குகிறது.

இம்முறை இந்த விசேட விமான பயணத்தில் 130க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் மதினி விஜேசிங்க தலைமை விமானியாகவும், அயோத்யா ரணசிங்க துணை விமானியாகவும் செயற்பட்டிருந்தனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்