விளையாட்டு

2027ல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி

உலகம் முழுவதும் விளையாட்டு ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது.

இந்த கிரிக்கெட் போட்டிகள் டெஸ்ட், ஒருநாள், டி20 என சர்வதேச அளவில் விளையாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் வரும் 2027ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி 1877ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமாகி 100 ஆண்டுகள் ஆனதை ஒட்டி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 1977ம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ