இலங்கை செய்தி

இலங்கையுடனான உறவை வலுப்படுத்த புதிய சீனத் தூதுவர் உறுதி

இலங்கையுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.

பதவியேற்பதற்காக நேற்று கொழும்பை வந்தடைந்துள்ள அவர், 2025-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகள் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் தோளோடு தோள் நின்று பயணிக்கவும், அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர வெற்றி மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான பரந்த வாய்ப்புகளைத் திறக்கவும் சீனா தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2025-ஆம் ஆண்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் சீனாவுக்கு மேற்கொண்ட பயணங்கள் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்புகள் இருதரப்பு உறவுகளுக்கு “புதிய மூலோபாய வழிகாட்டுதலை” வழங்கியுள்ளதாகவும், சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா தனது அண்டை நாடுகளின் இராஜதந்திரத்தில் இலங்கைக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது என்று கூறியுள்ள தூதுவர் வெய், இரு நாடுகளையும் அபிவிருத்தி மற்றும் “வெற்றி-வெற்றி ஒத்துழைப்பில்” பங்காளிகள் என்றும் விபரித்துள்ளார்.

தனது பதவிக்காலத்தில் இருதரப்புப் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காகப் பாடுபடவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை