ஆசியா

ஜப்பானில் ரயிலை நிறுத்திய பாம்பு – அதிவேக ரயில் சேவைக்கு ஏற்பட்ட பாதிப்பு

ஜப்பானின் மிகப் பரபரப்பான அதிவேக ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது.

பாம்பு ஒன்று மின்சார விநியோகக் கம்பிவடத்தில் சிக்கிக்கொண்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலை சுமார் 5.25 மணிக்குத் டோக்கியோவுக்கும் ஒசாகாவிற்கும் இடையே ஓடும் அதிவேக ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இரவு 7 மணிக்கு ரயில் சேவைகள் மீண்டும் தொடர்ந்துள்ளது. அதிகாரிகள் மின்சார விநியோகத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பயணிகள் ரயில் நிலையத்தில் கூடியதாகக் கூறப்படுகிறது.

ரயில் நுழைவுச்சீட்டுகளைப் பெறும் இயந்திரங்களிலும் நீண்ட வரிசைகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்