இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்தின் புன்புலம் சிங்களக் குடியேற்றம்: அமைச்சர் மறுப்பு!

“கிவுல் ஓயா திட்டத்தின் பின்னணி சிங்களக் குடியேற்றமல்ல.” – என்று Minister Ramalingam Chandrasekhar தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற பிரஜாசக்தி உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“கிவுல் ஓயா திட்டத்தை வைத்து பல்வேறு விதமான கருத்துகள் பரப்பப்படுகின்றன. சிங்களக் குடியேற்றத்தை நோக்கமாகக் கொண்டு கிவுல் ஓயா திட்டம் அமைக்கப்படவில்லை.

மாறாக, விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவே அந்தத் திட்டம் கொண்டுவரப்படுகின்றது. அங்கு குடியேற்றங்களை மேற்கொண்டால் தமிழ்க் குடியேற்றங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

கடந்த அரசுகளில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பில் நாங்கள் தீர்க்கமாக விசாரித்து வருகின்றோம்.

ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசு கடந்த அரசுகளைப் போன்றதல்ல. இந்த அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை உள்ளது.

மக்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கியே அனைத்துத் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.” – என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!