களுத்துறையில் துப்பாக்கிச் சூடு
60 people died in 114 shooting incidents in Sri Lanka last year
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அடையாளந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (14) இரவு 7.50 அளவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளந் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





