ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் அதிர்ச்சி – பூனைகளை காப்பாற்ற சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

பெல்ஜியத்தில் 78 செல்லப் பிராணிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒரு வீட்டில் உறைந்த நிலையில் இருந்த பிராணிகளின் சடலங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

25 பூனைகளைக் காப்பாற்றுவதற்காக விலங்கு மீட்பு அமைப்பு ஒன்று அந்த வீட்டிற்குச் சென்ற நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது..

அங்கு 75 பூனைகள், 3 நாய்கள் ஆகியவற்றின் சடலங்கள் குளிர்சாதனப் பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன.

அதில் சில அழுகிக்கொண்டிருந்ததாகவும் சிலவற்றில் கண்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

விலங்குகள் புறக்கணிக்கப்பட்டதாக அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவத்தைக் கண்டதே இல்லை என்று அவர் கூறினார்.

காப்பாற்றப்பட்ட 25 பூனைகளின் உடல்நலம் மோசமாய் இருந்ததாகவும் அவற்றுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த வீட்டில் இருந்தவர்கள் பற்றியோ வீட்டின் இடம் குறித்தோ எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்