நீர்கொழும்பு சிறை மோதல்: ரூ. 10 கோடி மேல் இழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட ககலவரத்தின்போது ஏற்பட்ட சொத்துச் சேதங்களின் மதிப்பு 100 மில்லியன் ரூபாயைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் 05ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது, சிறைச்சாலையின் கட்டடங்கள், சொத்துக்கள் மற்றும் கைதிகளின் முக்கிய பதிவு ஆவணங்களுக்குக் பலத்த சேதம் விளைவிக்கப்பட்டது.
இக்கொடூரச் சம்பவத்தில் 32 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2,400 கைதிகள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்நீர்கொழும்பு சிறைச்சாலையில், தற்போதைய சூழலில் 600-க்கும் மேற்பட்ட கைதிகள் மாத்திரமே எஞ்சியுள்ளனர். ஏனையோர் பாதுகாப்புக் காரணங்களுக்காக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள் இணையவழியூடாகவும் (Online) நேரடியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.




