அச்சுறுத்தும் சுறா: சிட்னியில் 20 கடற்கரைகளுக்கு பூட்டு!
ஆஸ்திரேலியா, சிட்னியில் வடக்கு கடற்பகுதியில் 20 கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணிநேரத்துக்குள் மூவர் சுறா தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை மேற்படி 20 கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிட்னி வடக்கு கடற்கரை பகுதியில் அந்நாட்டு நேரப்படி இன்று மாலை 20 வயது இளைஞர் ஒருவர் அலை சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
அவ்வேளையிலேயே அவர் சுறா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இன்று காலைவேளையில் வடக்கு கடற்கரை பகுதியில் 11 வயது சிறுவன் ஒருவர் சுறா தாக்குதலுக்கு இலக்கானார்.
நேற்று மாலை 12 வயது சிறுவன் இவ்வாறு சுறா தாக்குதலுக்கு இலக்காகி, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.





