லண்டனில் நடந்த தீ வைப்பு சம்பவங்கள் : பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தீவிர விசாரணை!
வடமேற்கு லண்டனில் நடந்த மூன்று தனித்தனி தீ வைப்புத் தாக்குதல்கள் குறித்து பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் கோல்டர்ஸ் கிரீனில் (Golders Green) ஆம்புலன்ஸ்கள் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதல், புதன்கிழமை ஃபிஞ்ச்லேயில் (synagogue ) உள்ள யூத வழிபாட்டுத் தலத்திற்கு தீ வைக்க முயற்சித்தமை, மற்றும் வெம்ப்ளியில் (Wembley) உள்ள ஒரு பாரசீக மொழி ஊடக நிறுவனத்தின் அலுவலகங்கள் மீதான தாக்குதல் ஆகிய சம்பவங்கள் குறித்தே மேற்படி விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“இந்த மூன்று சம்பவங்களின் தன்மை மற்றும் சூழ்நிலைகள் காரணமாகவே” இந்த விசாரணை நடைபெறுவதாக பெருநகர காவல்துறை (Met) கூறியுள்ளது.
ஈரானிய ஆதரவு பெற்ற குற்றக் குழுக்கள் இந்த பெட்ரோல் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தனவா என்பது குறித்து தாங்கள் ஒரு திறந்த மனதுடன் பரிசீலித்து வருவதாக” அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் எதுவும் பயங்கரவாதச் சம்பவங்களாக அறிவிக்கப்படவில்லை என்றும், இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து அதிகாரிகள் திறந்த மனதுடன் இருப்பதாகவும் பெருநகரக் காவல்துறை கூறியது.





