இலங்கை

இலங்கையில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்

(241128) — COLOMBO, Nov. 28, 2024 (Xinhua) — Cars run on a waterlogged road in Colombo, Sri Lanka, Nov. 26, 2024. Four people were killed, nine were injured, and six were missing due to floods in Sri Lanka, said the Disaster Management Center (DMC) on Wednesday. The floods have affected 230,743 people and destroyed more than 600 houses, Director General of the DMC Udaya Herath told a press conference. (Photo by Gayan Sameera/Xinhua)

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் முன்னறிவிப்புகளைப் பொதுமக்கள் கவனத்திற் கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்