ஐரோப்பா

அணுசக்தி பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் புட்டின் – ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அணுசக்தி பயங்கரவாதம் செய்வதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், செர்னோபில் அருகே ரஷ்யா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் வரலாற்றை மீண்டும் நிகழ்த்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

செர்னோபில் பேரழிவின் 40வது ஆண்டு நினைவு நாளில் பேசிய ஜெலென்ஸ்கி, இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

ரஷ்ய-ஈரானிய ஷாஹெட் ஆளில்லா விமானங்கள் அந்த ஆலைக்கு மேல் தொடர்ந்து பறப்பதையும், கடந்த ஆண்டு அவற்றில் ஒன்று பாதுகாப்பு வளையத்தைத் தாக்கியதையும் ஜெலென்ஸ்கி  சுட்டிக்காட்டினார்.

ரஷ்யா தனது பொறுப்பற்ற தாக்குதல்களை நிறுத்தும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம் இந்த “அணுசக்தி பயங்கரவாதத்தை” உலகம் தடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்