உலகம்

எண்ணெய் விலை உயர்வு : ஈரான் , ஓமானின் கூட்டு நடவடிக்கை!!

போரின் காரணமாக உலக பொருளாதாரம் நளிவுற்று வருகின்ற நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தி வழியான பாதுகாப்பான போக்குவரத்தை வழங்க ஈரான் மற்றும் ஓமான் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நீர்வழியில் உள்ள பொதுவான நலன்களைப் பாதுகாப்பதற்கு நிபுணர் மட்டத்திலான ஆலோசனைகளைத் தொடர ஈரானும் ஓமானும் ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) தெரிவித்தார்.

போரின் பொருளாதாரத் தாக்கம் ஆழமடைந்து வருவதால், உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் கடுமையாக பாதிப்படைந்துள்ள நிலையில் மேற்படி இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 107.97 டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!