இலங்கை செய்தி

சங்குபிட்டி பாலத்திற்கு அருகாமையில் கொமர்ஷல் வங்கி கிளை ஊழியர்களால் சுத்திகரிப்பு

கொமர்ஷல் வங்கி கிளிநொச்சி கிளையானது மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பவற்றுடன் இணைந்து
பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அருகாமையில் மிகவும் பிரமாண்டமான முறையில் சுத்திகரிப்பு நடவடிக்கை ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது கொமர்ஷல் வங்கி வட பிராந்திய முகாமையாளர் சிவஞானம், கொமர்ஷல் வங்கி, கிளிநொச்சி கிளை முகாமையாளர் சஞ்சீவ், மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் மகேஷ் ஜல்தோட்ட மற்றும் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை பொறுப்பதிகாரி கேசவன் ஆகியவர்கள் பங்கேற்றிருந்தனர்.

வட மாகாணத்தின் பிரதான சுற்றுலாத் துறை மையமான இப்பகுதியை சுத்தம் செய்ததையிட்டு பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் கொமர்ஷல் வங்கி கிளிநொச்சி கிளை இது போன்ற சூழல் பாதுகாப்பு சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் ஏனைய நிறுவனங்களுக்கு இது முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை