கைதி பரிமாற்றம் : பிரான்ஸில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈரானிய பிரஜை விடுதலை!
பிரான்ஸில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய பிரஜையான மஹ்தியே எஸ்பாந்தியாரி (Mahdieh Esfandiari ) நேற்று தாயகம் திரும்பியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் செய்யப்படும் ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவர் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது நாடு திரும்பியுள்ளார்.
2018 முதல் பிரான்சில் வசித்து, அங்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்த லியோன் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், கடந்த ஆண்டு பிப்ரவரியில் “பயங்கரவாதத்தை” ஊக்குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





