உலகம் செய்தி

ஈரானில் பாடசாலைகளுக்கு பூட்டு: 21 ஆம் திகதி முதல் இணையவழி கற்பித்தல்!

ஈரானில் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் இணையவழி ஊடாக கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறும் என அந்நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆரம்ப கல்வி முதல் உயர்கல்விவரை அனைத்து நிலைகளிலும் உள்ள மாணவர்களுக்கு இணையவழியில் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு மறு உத்தரவு வரும் வரை கற்றல் நடவடிக்கைகள் அனைத்தும் இணையம் வாயிலாகவே இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் சூழலைக்கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்தபடியே பாடங்களைத் தொடர இந்த மெய்நிகர் கற்றல் முறை வழிவகை செய்கிறது.

இது குறித்த முறையான வழிகாட்டுதல்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி