இலங்கை

இலங்கை: சில உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

எரிவாயு விலை குறைப்புக்கு அமைவாக பல உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் லாஃப்ஸ் பிஎல்சி நிறுவனம் இன்று (மே 03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இதன்படி, ப்ரைட் ரைஸ் , சோறு மற்றும் கறி மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 20 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

மேலும், சிற்றுண்டி உணவு வகைகளின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளில் திருத்தம் செய்யப்படாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்