05 வயதில் கர்ப்பம் : உலகை திரும்பி பார்க்க வைத்த சிறுமி!
லீனா மெடினா (Lina Medina) 1939-ஆம் ஆண்டில் பெரும்பாலான மீடியாக்களில் பேசப்பட்ட ஒரு பெயர். காரணம் 05 வயதில் சிறுமியொருவர் ஆண்குழந்தையொன்றுக்கு தாயானார் என்ற நம்பமுடியாத செய்திதான்.
மருத்துவ உலகில் மிகவும் அரிதாக நிகழ்ந்த ஒரு பிரசவம் இதுதான். சற்றும் நம்பமுடியாத இந்த கதை வாசகர்களை கற்பனையின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.
லீனா, பெருவின் மிக ஏழ்மையான பகுதியான மலைப்பாங்கான இடத்தில் சுமார் 7,400 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார்.

ஆரம்பத்தில், தங்கள் மகளுக்கு வயிற்றில் ஒரு பெரிய கட்டி இருப்பதாக நினைத்த அப்பெண்ணின் பெற்றோர், அவரை பெருவின் பிஸ்கோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நம்பமுடியாத உண்மையை கண்டுப்பிடித்தனர். அப்போது அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது.
இருப்பினும் மருத்துவ உலகில் இதற்கு சாத்தியமான வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது ஒவ்வொரு 10,000 குழந்தைகளிலும் சுமார் ஒரு குழந்தைக்கு முன்கூட்டிய பருவமடைதல் எனப்படும் ஒரு நிலையால் பாதிக்கப்படுகிறது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரிலுமே ஏற்படும்.
மெடினாவும் அந்தக் குழந்தைகளில் ஒருவராக இருந்ததாக மருத்துவர்கள் கண்டுப்பிடித்தனர்.

பல ஆண்டுகளாக, பலர் அவளது கதையை ஒரு முழுமையான பொய் என்று கூறி வந்துள்ளனர், இருப்பினும், எக்ஸ்-கதிர்கள், புகைப்படங்கள் மற்றும் மருத்துவர்களின் ஆவணங்கள் இது உண்மையில் நடந்தது என்பதற்கான சான்றுகளாகும். இருப்பினும், அந்தக் குழந்தையின் தந்தையின் ஒருபோதும் அடையாளம் காணப்படவில்லை.
அவளது மெலிந்த உடலமைப்பு, பிறப்புக் கால்வாய் வழியாக ஒரு முழு வளர்ச்சி அடைந்த குழந்தையை வெளியேற்றுவதற்குப் போதுமானதாக இல்லாததால், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றது.
மிகச் சிறுவயதிலேயே குழந்தையை ஈன்றெடுத்த பெண்ணாக மெலினா காணப்படுகிறார்.





