இந்தியா செய்தி

ஈரான் ஜனாதிபதியுடன், பிரதமர் மோடி அவசர பேச்சு!

ஈரான் ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கிடையில் தொலைபேசிமூலம் இன்று (21) கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஹார்முஸ் நீரிணை சுதந்திரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

‘‘ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியானுடன் தொலைபேசியில் பேசி, ரமலான் மற்றும் நவ்ரூஸ் (புத்தாண்டு) வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்த பண்டிகைக் காலம் மேற்கு ஆசியாவுக்கு அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பைக் கொண்டு வரும் என்று நம்பிக்கையை தெரிவித்தேன்.” என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிராந்திய ஸ்திரதன்மைக்கு அச்சுறுத்தலாகவும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைப்பதாகவும் உள்ள பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தேன்.

கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் கப்பல் வழித்தடங்கள் திறந்தும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதையும் மீண்டும் வலியுறுத்தினேன்” எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி