செய்தி தமிழ்நாடு

தேர்தலில்‌ மக்கள் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள்‌- அன்புமணி அறிக்கை

திமுக ஆட்சியை அகற்றுவதற்காக மக்கள் திரண்டு வந்து வாக்களித்துள்ளதாக தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி தேர்தலில் மக்கள் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வரலாற்றில் இந்த அளவு வாக்குகள் பதிவாகியிருப்பது இதுவே முதன் முறையாகும்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்தனர், திமுக ஆட்சியை அகற்றுவதற்காக திரண்டு வந்து வாக்களித்துள்ளனர் என்பதையுமே இது காட்டுகிறது.

தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஜனநாயகத்தை மதிப்பவர்கள். அமைதிப்புரட்சி செய்பவர்கள். இப்போதும் அதைத்தான் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இன்னொருபுறம் சட்டம் – ஒழுங்கை பாதுகாத்தல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கட்டுப்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட ஓர் அரசின் அடிப்படைக் கடமைகள் எதையுமே திமுக அரசு செய்யவில்லை.

அதனால், கொந்தளித்துப் போன மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவதற்காக காத்திருந்தனர். மக்கள் தங்களின் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தாமல், தெளிந்த நீரோடையாக இருந்தாலும், ஆழ்கடலின் பிரளயம் போன்று அவர்களின் மனதுக்குள் திமுகவை இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற கோபம் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த என்னைப் போன்றவர்களால் இந்த கோபத்தை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், ஆட்சியாளர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, அதனால் தங்களைத் திருத்திக் கொள்ளவும் இல்லை. எனவேதான் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தவாறு நேற்று நடந்த தேர்தலில் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தி விட்டனர். அதன் விளைவு தான் வரலாறு காணாத வகையில் 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பதாகும்.

இந்த வாக்குகள் ஆட்சி மாற்றத்துக்கான வாக்குகள் தான் என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தத் தீர்ப்புக்காகத் தான் தமிழ்நாட்டு மக்கள் காத்திருந்தார்கள். இந்தத் தீர்ப்பு தான் தமிழக மக்களுக்கு நரக ஆட்சியிலிருந்து விடுதலை அளிக்கப் போகிறது.

இனி வரும் காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பையும், அனைவருக்கும் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தத் தீர்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!