ஐரோப்பா

போப் பிரான்சிஸ் நலனுக்காக பிரார்த்தனை செய்ய வாடிகனில் குவிந்த மக்கள்..

போப் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வாடிகன் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

அவர் உடல் நலன் பெற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

88 வயதாகும் போப் பிரான்சிஸ், நிமோனியா பாதித்து மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு 11 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன

திங்கள்கிழமை மாலை முதல் வாடிகன் சதுக்கத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள், மிகவும் குளிரான மற்றும் மழை கொட்டும் இரவையும் பொருட்படுத்தாமல், போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

இருப்பினும், நினைவுச்சின்ன சதுக்கத்தில் கூடியிருந்த மக்களின் மனநிலை பெரும்பாலும் சோகமாகவே இருந்தது. அங்குக் கூடியிருந்த சுமார் 4,000 பேரில் பலர் பிரான்சிஸின் இறுதி நாள்களாக இது இருக்கக் கூடும் என்று கருதினர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்