$20,000 மதிப்புள்ள முட்டையை விழுங்கிய நியூசிலாந்து நபர்
New Zealand man swallows egg worth $20,000
நியூசிலாந்தில்(New Zealand) நபர் ஒருவர் உயர்ரக நகைக் கடையில் இருந்து வைரம் பதித்த பச்சை நிற ஃபேபர்ஜ் முட்டையை(Faberge egg) விழுங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான அந்த நபர் கடந்த வார இறுதியில் ஆக்லாந்தில்(Auckland) உள்ள ஒரு கடையில் இருந்து முட்டையை விழுங்கியுள்ளார், பின்னர் அவர் தப்பிச் செல்வதற்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சுமார் $20,000 மதிப்புள்ள அலங்கரிக்கப்பட்ட முட்டை இன்னும் மீட்கப்படவில்லை என்றும் இயற்கையாக வெளியேறும் வரை காத்திருக்கிறோம், இதனை கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஃபேபர்ஜ் முட்டை 60 வெள்ளை வைரங்கள்(diamonds) மற்றும் 15 நீல சபையர்களால்(sapphires) அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




