இந்தியா செய்தி

விண்வெளி சாதனை நாயகி சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு : 27 ஆண்டுகால நாசா பயணம் நிறைவு

விண்வெளித் துறையின் ஈடு இணையற்ற சாதனையாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார்.

கடந்த 27 ஆண்டுகளாக நாசாவில் பணியாற்றிய இவர், மூன்று வெவ்வேறு விண்வெளிப் பயணங்கள் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் 608 நாட்களைக் கழித்துள்ளார்.

2006-ஆம் ஆண்டு தனது முதல் பயணத்தைத் தொடங்கிய சுனிதா, விண்வெளியில் நீண்ட நேரம் நடந்த பெண் என்ற சாதனையையும் ஒரு காலத்தில் படைத்திருந்தார்.

அவரது ஓய்வு மிகவும் சவாலான ஒரு பயணத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஜூன் மாதம் 8 நாட்கள் பயணமாகச் சென்ற அவர், விண்கலக் கோளாறு காரணமாக 9 மாதங்கள் அங்கேயே சிக்கியிருந்தார்.

அந்த இக்கட்டான சூழலிலும் விண்வெளி நிலையத்தின் கமாண்டராகப் பொறுப்பேற்று, துணிச்சலுடன் செயற்பட்டு 2025 மார்ச் மாதம் பூமி திரும்பினார்.

தற்போது 60 வயதாகும் சுனிதா வில்லியம்ஸ் தனது ஓய்வுக்குப் பின் இந்தியா வருகை தந்துள்ளார்.

அவரது இந்த ஓய்வு விண்வெளி வரலாற்றில் ஒரு சகாப்தத்தின் நிறைவாகப் பார்க்கப்படுகிறது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி