இலங்கை செய்தி

2029 ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் நாமல் ராஜபக்ச

"2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும். நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார். இந்த இலக்கை நோக்கிய எமது வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

“2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும். நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார். இந்த இலக்கை நோக்கிய எமது வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“2029 ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம். நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார். அதற்குரிய சிறந்த வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. அதற்கேற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எமது அணியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறும். அதற்குரிய ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் எமது கட்சியின் வளர்ச்சியை நீங்கள் காணலாம். அடுத்த மாதம் முதல் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகும். எங்களது வியூகத்தை முன்கூட்டியே வெளியிட மாட்டோம்; அடுத்த மாதமே அதனை வெளிப்படுத்துவோம்” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை