ஐரோப்பா

பிரான்ஸிற்கு உக்ரைனில் இருந்து நவீன ஆயுதங்கள் கொண்டு சென்ற மர்ம நபர்கள்

உக்ரைனில் இருந்து நவீன ஆயுதங்கள் சிலவற்றை மறைத்து பிரான்ஸிற்கு எடுத்து சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்கவரித்துறையினரால் குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் இருந்து கலே (Calais) வழியாக பிரான்சுக்குள் நுழைந்த வாகனம் ஒன்றை சுங்கவரித்துறையினர் சோதனையிட்டனர்.

இதன் போது, வாகனத்திற்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘ரொக்கட் லோஞ்சர்’ ஆயுதம் ஒன்றும் மேலும் பல துப்பாக்கி குண்டுகளும் கைப்பற்றப்பட்டது. அத்துடன் துண்டு துளைக்காத கவச உடைகள் சிலவும் மகிழுந்துக்குள் இருந்துள்ளது.

வைத்திருப்பதற்கு அனுமதி இல்லாத ஆபத்தான ‘C’ பிரிவு ஆயுதங்கள் அவை என்பதால் உடனடியாக அவை கைப்பற்றப்பட்டதுடன், வாகனத்தில் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

உக்ரேனில் இருந்து புறப்பட்ட அவர்கள் பிரித்தானியா வழியாக பிரான்சை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்