உலகம் செய்தி

எப்ஸ்டீனுடன் தனியார் தீவுக்கு செல்ல விரும்பிய மஸ்க் – கடிதப் போக்குவரத்து தொடர்பில் விளக்கம்!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான (Jeffrey Epstein) உரையாடல்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பில் மஸ்க் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட தொடர்ச்சியான மின்னஞ்சல்களில் கரீபியன் கடலில் உள்ள தனியார் தீவுக்கு எபஸ்டீனுடன் செல்ல மஸ்க் விரும்பியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ள அவர், “எப்ஸ்டீனுடன் எனக்கு மிகக் குறைவான கடிதப் போக்குவரத்து இருந்தது, மேலும் அவரது தீவுக்குச் செல்லவோ அல்லது அவரது ‘லோலிடா எக்ஸ்பிரஸில்’ பறக்கவோ வந்த அழைப்புகளை நான் மறுத்துவிட்டேன்.

ஆனால் அவருடனான சில மின்னஞ்சல் கடிதப் போக்குவரத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, என் பெயரைக் கெடுக்க எதிர்ப்பாளர்களால் பயன்படுத்தப்படலாம் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கியமானது எப்ஸ்டீன் கோப்புகளின் சில துணைக்குழுவை வெளியிடுவது அல்ல, மாறாக எப்ஸ்டீனுடன் கொடூரமான குற்றங்களைச் செய்தவர்கள் மீது வழக்குத் தொடுப்பதுதான்” என்றும் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி