முதல் வெற்றியை பதிவு செய்தது Mumbai Indians
IPL 2026 தொடரில் தொடர் தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது Mumbai Indians அணி.
ஐபிஎல் 2026 தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் Gujarat Titans, Mumbai Indians ஆகிய அணிகள் நேற்று மோதின.
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைப் பெற்றது.
200 ஓட்டங்கள் கடினமான இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அண 15.5 ஓவர்களில் வெறும் 100 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.
ஜஸ்பிரித் பும்ரா தனது முதல் பந்திலேயே சாய் சுதர்சனை (0) ஆட்டமிழக்கச் செய்தார்.
மும்பை அணியின் பந்துவீச்சாளர் அஸ்வானி குமார் அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி குஜராத் அணியின் பேட்டிங் வரிசையைச் சரித்தார்.
தொடர்ந்து நான்கு தோல்விகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில் பெற்ற 99 ஓட்டங்கள் வித்தியாசத்திலான மெகா வெற்றி, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓட்ட விகிதத்தை வெகுவாக உயர்த்தியுள்ளது.
ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மாவின் சதம், மும்பை ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.





