இலங்கை

இலங்கையில் பொழியும் விண்கல் மழை!! மக்களுக்கு அரிய வாய்ப்பு!

இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய விண்கல் மழையை இன்று (16) நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலையில் காணலாம் என்று வானியலாளரும் மூத்த விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

லியோனிட் விண்கல் பொழிவை (Leonid meteor shower) மக்கள் காணலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றி வர 33 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் . இதன்போது உடைந்த ஆஸ்ட்ராய்டுகளின் ( broken astroids) துண்டுகள் மற்றும் மீதமுள்ள வால் நட்சத்திரத் துகள்கள் அண்டவெளியில் விட்டுச் செல்லும்.  இவையே விண்மீன் மழையாக பொழிகிறது.

மூத்த விரிவுரையாளர் கிஹான் வீரசேகர, நாளை அதிகாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை விண்கல் பொழிவை மிகத் தெளிவாகக் காணலாம் என்று குறிப்பிட்டார்.

இந்த விண்கல் மழையின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த தூசி துகள்கள் ஒப்பீட்டளவில் அதிக வேகத்தில் பயணிக்கின்றன. வளிமண்டலத்துடனான இந்த அதிவேக தொடர்பு காரணமாக, விண்கற்கள் பிரகாசமாகத் தோன்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்