இலங்கை செய்தி

சுமித் லால் மண்டிஸுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்டத் தலைவர் மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் சுமித் லால் மண்டிஸ் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷமல் செனரத் ஆகியோரைச் சந்தித்ததன் பின்னர் இன்று சிறிகொத்த தலைமையகத்தில் வைத்து கட்சியில் இணைந்துகொண்டார்.

ஒன்றரை வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் நாட்டை இருந்த இடத்தில் இருந்து உயர்த்த ஜனாதிபதியின் பொருளாதார தத்துவத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை வெற்றியடையச் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவும் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் பெற்றுள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை