உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மலேசிய அரசியலில் திருப்புமுனை: ஆகஸ்ட் 16-ல் DAP கட்சியின் அதிரடி முடிவு

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான 'ஜனநாயகச் செயல் கட்சி' (DAP), அரசாங்கப் பதவிகளில் அதன் தலைவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை வரும் ஆகஸ்ட் 16-ஆம் திகதி தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான ‘ஜனநாயகச் செயல் கட்சி’ (DAP), அரசாங்கப் பதவிகளில் அதன் தலைவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை வரும் ஆகஸ்ட் 16-ஆம் திகதி தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆளும் கூட்டணியின் மிகப்பெரிய கட்சியாகவும், சிறுபான்மையின மக்கள் மற்றும் முற்போக்கு வாக்காளர்கள் மத்தியில் அதிக ஆதரவு கொண்ட கட்சியாகவும் விளங்கும் DAP, சமீபகாலமாக மக்கள் ஆதரவை இழந்து வருகிறது.

ஊழல் வழக்குகள், இனம் மற்றும் மதம் சார்ந்த விவகாரங்களை அரசு கையாண்ட விதம் மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் அரசின் அர்ப்பணிப்பு குறித்தான கவலைகள் ஆகியவற்றுக்கு எழுந்த எதிர்ப்புகளே இதற்குக் காரணமாகும்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற மூன்றாவது தொடர் மாநிலத் தேர்தலில் அன்வரின் ‘பக்கத்தான் ஹரப்பான்’ (Pakatan Harapan) கூட்டணி தோல்வியடைந்தது.

இதில், போக்குவரத்து அமைச்சரும் DAP பொதுச்செயலாளருமான அந்தோணி லோக் (Anthony Loke), 13 ஆண்டுகளுக்குப் பிறகு நெகரி செம்பிலான் (Negeri Sembilan) மாநில சட்டமன்றத்தில் தனது தொகுதியை இழந்தார்.

இந்த மாத பிற்பகுதியில் நடைபெறவுள்ள DAP தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளும் சுமார் 4,000 பிரதிநிதிகள், தற்போதைய நாடாளுமன்றக் காலத்தின் எஞ்சிய பகுதிக்குக் கட்சி அரசாங்கப் பதவிகளில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து இரகசிய வாக்கெடுப்பு நடத்துவார்கள் என்று லோக் திங்கட்கிழமை இரவன்று தெரிவித்தார்.

தற்போது மலேசிய அமைச்சரவையில் DAP கட்சிக்கு ஐந்து அமைச்சர்களும் ஏழு பிரதி அமைச்சர்களும் உள்ளனர்.

“(இந்த வாக்கெடுப்பு) அரசாங்கத்தில் நமது பங்கேற்பை தீர்மானிக்கும் – அதாவது நாம் தொடர்ந்து ஆளுங்கட்சித் தரப்பில் (front bench) நீடிக்கிறோமா இல்லையா என்பதை முடிவு செய்யும்,” என்று லோக் கூறினார்.

இருப்பினும், இந்த வாக்கெடுப்பின் முடிவு பிரதமர் அன்வருக்கு அளிக்கும் ஆதரவையோ அல்லது பக்கத்தான் கூட்டணியில் கட்சி வகிக்கும் உறுப்பினர் நிலையையோ பாதிக்காது என்றும் அவர் மேலும் கூட்டினார்.

அடுத்த பொதுத்தேர்தல் 2028-ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நடைபெற வாய்ப்பில்லை என்றாலும், தனது நிர்வாகத்திற்குள் பிளவுகள் தொடர்ந்து விரிவடைந்தால் முன் கூட்டியே இடைத்தேர்தல் (Snap Elections) நடத்தப்படலாம் என்று அன்வர் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி