இலங்கை செய்தி

அவுஸ்திரேலியா கனவை நனவாக்குங்கள் – “Aus Lanka TV Education Migration Expo 2024”

அவுஸ்திரேலியாவுக்கு வந்து அந்த கனவை நனவாக்கும் நோக்கில் தேவையான தகவல்களை வழங்கும் நோக்கில் இலங்கையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கான சரியான பாதையை தேடும் அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கில் “Aus Lanka TV Education Migration Expo 2024” என்ற இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி கொழும்பு 5, ஹெவ்லொக் சிட்டியில் நடைபெறவுள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக அவுஸ்திரேலியாவின் பிரதான குடிவரவு முகவர் நிலையங்கள், அவற்றின் பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் இலங்கைக்கு வருகை தர உள்ளனர்.

மேலும், அவுஸ்திரேலியாவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் தொடர்பில் பணியாற்றும் பல பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் “Aus Lanka TV Education Migration Expo” திட்டத்தில் இணையவுள்ளனர்.

மாணவர் விசா, ஸ்பான்சர் விசா, ஸ்கில் விசா மற்றும் பிற விசா வகைகளைப் பெறுவது எப்படி என்பது குறித்து முழு விழிப்புணர்வை வழங்கவும், அதற்கான வழியை தயார் செய்யவும் இங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு வரும் நிறுவனங்கள் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கான அனைத்து சரியான வழிமுறைகளையும் விழிப்புணர்வையும் வழங்க தயாராக உள்ளன.

சரியான பல்கலைகழகத்தை தேர்வு செய்தல், குடியுரிமை பெறும் வாய்ப்புள்ள சரியான படிப்பை தேர்வு செய்தல், கல்வி உதவித்தொகைக்கு தேவையான தகுதிகளை சுட்டிக்காட்டி அந்த உதவித்தொகைகளை குறிப்பிடுதல், பல்கலைகழகங்களை தேர்வு செய்து அதில் சேர்வதற்கான நடைமுறைகளை தெளிவுபடுத்துதல், நிதி தேவைகளுக்கு சரியான ஆலோசனை வழங்குதல், விழிப்புணர்வு வேலை விசாவிற்குத் தேவையான ஸ்பான்சர்களைத் தொடர்புகொள்வதற்கான சரியான வழியும் இங்கே செய்யப்படும்.

இந்தச் சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன், அவுஸ்ரேலியாவிற்கு வரும் அனைத்து இலங்கையர்களுக்கும் பல வருடங்களாக Aus Lanka TV ஊடக நிறுவனம் கல்வி கற்பித்து வருகின்றது.

அவுஸ்திரேலியாவிற்கு வரும் போது பெருமளவான மக்கள் மோசடியில் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு சரியான முறையில் அவுஸ்திரேலியா வருவதற்கான அறிவை வழங்கும் நோக்கில் Aus Lanka TV ஊடக வலையமைப்பு இந்த “Aus Lanka TV Education Migration Expo” நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content