லக்னோ தீவிபத்து – நால்வர் கைது, 6 பேர் மீது வழக்கு பதிவு
இந்தியா – லக்னோவில் உள்ள மூன்று மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ள விவகாரம் தொடர்பில் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிக மக்கள் அடர்த்தி கொண்ட அலிகஞ்ச் பகுதியில், செல்லப்பிராணிகள் கடை மற்றும் அனிமேஷன் 3டி கேமிங் மையம் இயங்கி வந்த கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
இதில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 07 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கட்டிடத்தில் அவசரகால வெளியேறும் வழிகளோ அல்லது தீயணைப்பு அமைப்புகளோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தீ பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விசாரணைக்காக ஒரு சிறப்பு குழு களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




