இலங்கை

உள்ளுராட்சி தேர்தல் : அநுரவின் போராட்டத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்!

தேசிய மக்கள் சக்தியினால் இன்று(08) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராகவே போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (07) இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

வெலிக்கடை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி,  கொடா வீதி மற்றும் சரண வீதி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல் செயலகத்திற்குள் பிரவேசிப்பதை தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்