சோமாலிலாந்திற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணம் மேற்கொண்ட இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர்
Israeli Foreign Minister makes historic visit to Somaliland
இஸ்ரேல்(Israel) சோமாலிலாந்தை(Somaliland) ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்த பிறகு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் அரசுமுறை பயணமாக சோமாலிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்
இந்த முதல் விஜயத்தின் போது சோமாலிலாந்து ஜனாதிபதி அப்திரகுமான் முகமது அப்துல்லாவுடன்(Abdirahman Mohamed Abdullahi) வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியோன் சார்(Gideon Sarr) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
இதன் போது சோமாலிலாந்துடனான உறவுகளை வேகத்துடன் முன்னேற்ற இஸ்ரேல் உறுதியாக இருப்பதாக கிடியோன் சார் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 26ம் திகதி சோமாலிலாந்தை தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடு என்ற பெருமையை இஸ்ரேல் பெற்றது குறிப்பிடத்தக்கது.





