மத்திய கிழக்கு

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; ஹிஸ்புல்லா அமைப்பின் கமாண்டர் பலி!

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மட்டுமல்லாது அவ்வப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்படைக்கு எதிரான தாக்குதலையும் நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில், நேற்று நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா கமாண்டர் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

போரில் இதுவரை 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.

போர் தொடங்கி 300 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இந்த போரின் நோக்கத்தை இஸ்ரேல் நிறைவேற்றியிருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான பதிலை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார். “ஹமாஸ் என்பது ஒரு சிந்தனை, ஹமாஸ் ஒரு கட்சி, இது மக்களின் இதயங்களில் வேரூன்றியிருக்கிறது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு” என்று கூறியுள்ளார்.

மறுபுறம் பாலஸ்தீனம் மீதான தாக்குதலை இஸ்ரேல் கூர்மைப்படுத்தியுள்ளது. மேலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அமைப்புகள் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் நேற்று ஹிஸ்புல்லா அமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், இஸ்ரேல் விமானப்படை வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் ஃபுவாட் ஷுக்ர் கொல்லப்பட்டிருக்கிறார் என இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ஆனால் ஹிஸ்புல்லா இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஹில்புல்லா அமைப்பு, இஸ்ரேலின் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டதாகவும் எனவேதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

 

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.