உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது மீண்டும் தாக்குதல் – இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல் தனது தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயார் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் தனது தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயார் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் Israel Katz எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே இருமுறை ஈரான் மீது ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தேவைப்பட்டால் மூன்றாவது முறையாகத் தாக்குதல் தொடரும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தூதரக முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், இஸ்ரேலிய சமூகங்களைப் பாதுகாக்க லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்படி நாடுகளில் குறிப்பிட்ட பாதுகாப்பு மண்டலங்களை காலவரையின்றி ஆக்கிரமித்து வைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இஸ்ரேல் எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் எடுக்க இஸ்ரேல் தயங்காது என்பது அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் கருத்து மூலம் புலனாகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி