இஸ்ரேல் – லெபனான் இடையில் பூர்வாங்க ஒப்பந்தம் கையெழுத்து
அமெரிக்காவின் தலையீட்டிற்குப் பிறகு இஸ்ரேலும் லெபனானும் ஒரு பூர்வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதர் யெச்சியல் லெய்டர் மற்றும் அமெரிக்காவிற்கான லெபனான் தூதர் நாடா முவாட் ஆகியோருக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் டேனியல் ஹோலர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேல் வெளியேறுவதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடாத பட்சத்தில், தெற்கு லெபனானை இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்க இந்த ஒப்பந்தம் அனுமதிக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.





