செய்தி விளையாட்டு

IPL Match 51 – 224 ஓட்டங்கள் குவித்த குஜராத் அணி

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் 51வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் களம் இறங்கினர்.

பவுண்டரி, சிக்சர் என அதிரடியாக இந்த இணை பவர்பிளேவான 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ரன் எடுத்துள்ளது. இதில் அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 23 பந்தில் 48 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து பட்லருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இதில் பட்லர் அதிரடியாக ஆடினார். அவர் 31 பந்தில் அரைசதம் அடித்தார். அவர் 64 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட், கம்மின்ஸ், ஜீஷன் அன்சாரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி