விளையாட்டு

IPL Eliminator – 172 ஓட்டங்கள் குவித்த பெங்களூரு

ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். 17 ரன்னில் டுபிளிசிஸ் அவுட் ஆனார். அதை தொடர்ந்து விராட் கோலி 33 ரன்னிலும் க்ரீன் 27 ரன்னிலும் வெளியேறினார்.

இக்கட்டான சூழலில் களமிறங்கிய மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார். அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய சில நிமிடங்களில் பட்டிதார் 34 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் ரிவ்யூ மூலம் அவுட் இல்லை என தெரிய வந்தது.

இதனையடுத்து தொடர்ந்து விளையாடிய தினேஷ் கார்த்திக், தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்சிபி அணிக்கு ஷாக் கொடுத்து 11 ரன்னில் வெளியேறினார்.

ஒரு முனையில் நான் இருக்கிறேன் என அதிரடி காட்டிய மஹிபால் லோமரோர் 17 பந்தில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ