இந்தியா தமிழ்நாடு

தேர்தல் திருவிழாவுக்கு மத்தியில் 17 ஆம் திகதி இடைக்கால பாதீடு முன்வைப்பு!

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், மாநில அரசாங்கத்தால் இடைக்கால அரசு – செலவுத்திட்டம் முன்வைக்கபடும் கால எல்லை அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி பாதீடு முன்வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் திகதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், தேர்தல் நடவடிக்கை களை கட்டியுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ளதால் தமிழக அரசு 2026-27 நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 5 ஆம் திகதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே வரவு- செலவுத் திட்டத்தை 17 ஆம் திகதி காலை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்வைப்பார்.

Dila

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்