இந்தியா செய்தி

யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையே நேரடி விமான சேவையை வழங்கும் இண்டிகோ நிறுவனம்!

இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம், யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்நாட்டின்  திருச்சி விமான நிலையத்திற்கு இடையே தினசரி நேரடி விமான சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மார்ச் 30 ஆம் திகதி முதல் தனது சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு இடையே விமானங்களுக்கான அதிக தேவையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

இந்த விமானப் பாதை வணிக மற்றும் மதப் பயணங்களுக்கு பிரபலமாகிவிட்டதாகவும், தினசரி நேரடி விமானங்கள் இயக்கப்படுவது இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி