இந்தியா செய்தி

கோவையில் ஊதியம் வழங்காததால் தீக்குளிக்க முயன்ற நபர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஒருவர் உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் சத்தமிடவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வந்த ரவிச்சந்திரன் என்பதும் தற்பொழுது திருப்பூரில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்த நிலையில் 20 நாட்கள் வேலை செய்ததற்கான ஊதியத்தை கொடுக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்து அவரை பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி