இலங்கை

இலங்கையில் பச்சைக்குத்திக் கொள்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் பச்சைக்குத்திய நபர்களிடம் இருந்து ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

பச்சைக் குத்துதல் மற்றும், ஊசி ஏற்றல் முதலான செயற்பாடுகள் மூலம், எயிட்ஸ் உள்ளிட்ட 5 நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக தெரியவந்துள்ளது.

இதனாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, பச்சைக் குத்திய காலத்தில் இருந்து, ஒரு வருட காலத்திற்கு குறித்த நபர்களிடம் இருந்து குருதி பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எவ்வாறிருப்பினும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் குருதியை பெற்றுக்கொள்வதில், எந்த பிரச்சினையும் காணப்படாது.

அதேநேரம் இந்த வருடத்தில், தேசிய குருதி வங்கிக்கு 4 இலட்சத்து 20 ஆயிரம் குருதி அலகுகள் தேவைப்படுகின்றன.

எனினும், தற்போது போதியளவு குருதி அலகுகள் கையிருப்பில் உள்ளதாக தேசிய குருதி மாற்று மத்திய நிலைத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்