இந்தியா

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு!

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி  6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையொன்றில், வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அதிகரித்த வரிகள்  தேவையைக் குறைக்கக்கூடும். இருப்பினும், அவை இந்தியாவின் வர்த்தப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயங்களில் ஒன்றான ரூபாயை ஆதரிக்கவும் உதவக்கூடும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்க உதவும் வகையில், ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வலியுறுத்தியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்திய விலை உயர்வு மற்றும் கடந்த ஆண்டில் பங்குகளில் இருந்து கிடைத்த எதிர்மறை வருமானம் ஆகியவற்றின் மத்தியில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை, குறிப்பாக முதலீட்டு நோக்கங்களுக்காக, அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!