ஐரோப்பா

பிரித்தானியாவில் விசா பெற்றவர் உயிரிழந்தால் அவரை சார்ந்திருப்போர் நாடு கடத்தப்படும் அபாயம்!

லண்டனில் வசித்து வரும் இந்திய பிரஜை ஒருவர் தற்போது நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளார்.

முகமது ஷெத்வாலா (mhammad Shethwala) மற்றும் அவரது மனைவியான சாதிகாபானு தபேலிவாலா (Sadikabanu Tapeliwala) ஆகியோர் கடந்த  2023 ஆம் ஆண்டில் லண்டனுக்கு குடிப்பெயர்ந்துள்ளனர்.

சாதிகாபானு அங்கு அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.  அதே ஆண்டில் அவர்களுக்கு பாத்திமா என்ற குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் இந்தியாவில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் தபேலிவாலாவும் அவரது இரண்டு வயது குழந்தையான பாத்திமாவும் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது ஷெத்வாலா  நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளார். 2022-ல் தபேலிவாலாவுக்கு மாணவர் விசா கிடைத்தபோது, ​​சேத்வாலா அவரைச் சார்ந்தவராக பிரிட்டனுக்கு குடிப்பெயர்ந்துள்ளார்.

அவரது குடியேற்ற நிலை, அவரது மனைவியின் விசா வழியைச் சார்ந்திருந்ததால், வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க அவர் கருணை அடிப்படையில் மேலும் தங்குவதற்கான அனுமதிக்கு  விண்ணப்பித்துள்ளார். அத்துடன்  தனது மனநலம் குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் மனநல அறிக்கை ஒன்றையும்  விண்ணப்பத்துடன் சமர்ப்பித்துள்ளார்.

இருப்பினும் ஏப்ரல் 9 அன்று, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்காலிக குடிவரவு ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மேல்முறையீடு செய்யக்கூட தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை,” என ஷெத்வாலா  குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சகம் இந்தத் தனிப்பட்ட வழக்கு குறித்து பகிரங்கமாகக் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!