இஸ்ரேல் சோமாலிலாந்தை அங்கீகரித்ததற்கு எதிராக சோமாலியாவில் போராட்டம்
Hundreds protest in Somalia against Israel’s recognition of Somaliland
சோமாலிலாந்தை(Somaliland) இஸ்ரேல்(Israel) தனி குடியரசாக அங்கீகரித்ததை எதிர்த்து சோமாலியாவின்(Somalia) தலைநகரில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மொகடிஷுவின்(Mogadishu) மையப்பகுதியில் உள்ள தலே(Taleh) சதுக்கத்தில் போராட்டம் நடைபெற்றது.
சோமாலியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு அதிகரித்துள்ளது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சோமாலிலாந்தை ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக இஸ்ரேல் அங்கீகரித்ததாக அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் சோமாலிலாந்து தலைநகரான ஹர்கீசாவுக்கு(Hargeisa) சென்ற இரண்டு நாட்களுக்குப் பிறகும் இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.





