செய்தி

அமெரிக்க பிரதிநிதி வந்துசென்ற கையோடு சீன பிரமுகரும் கொழும்பு வருகை!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் , கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். மூன்று நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த அவரை, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, விமான நிலையம் சென்று வரவேற்றார். இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் பல அதிகாரிகளும் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். சீனா தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் , இலங்கை ஜனாதிபதி, பிரதமர் […]

இலங்கை

இலங்கையில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கையில் கடந்த 27ஆம் திகதி முதல் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்தவர்களாகும். அவர்களில் பெரும்பாலானோர் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், அந்த மாவட்டத்தில் இவ்வாறான 21 சிறுவர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாக சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் 20 சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோரை இழந்துள்ளனர். இதனிடையே, அனர்த்தம் […]

இந்தியா

டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் – விமான, போக்குவரத்து சேவைகள் முடக்கம்

  • December 17, 2025
  • 0 Comments

டெல்லியின் காற்றின் தரக் குறியீடு இன்று (17) காலை 329 புள்ளிகளில் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவலின்படி, டெல்லி முழுவதும் உள்ள அனைத்து கண்காணிப்பு நிலையங்களிலும் காலை 7 மணி நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு கடுமையான வரம்பிற்குக் கீழே இருந்தது. சில பகுதிகள் மோசமான மண்டலத்தில் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் பலத்த காற்று மற்றும் மெல்லிய மூடுபனி மாசுபாட்டின் அளவை கடுமையான வகையிலிருந்து வெளியே தள்ள உதவியது. […]

உலகம்

05 நாடுகள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை!

  • December 17, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் ஐந்து நாடுகளில் வசிக்கும் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய அறிவிப்பின்படி, புர்கினா பாசோ (Burkina Faso), மாலி (Mali), நைஜர் (Niger), தெற்கு சூடான் ( South Sudan)  மற்றும் சிரியாவைச் (Syria) சேர்ந்தவர்கள் மற்றும் பாலஸ்தீன ஆணையத்தின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மீது முழு நுழைவு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் “அமெரிக்காவின் பாதுகாப்பை” பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேற்படி ட்ரம்பின் […]

உலகம் செய்தி

மோசடி குற்றச்சாட்டு – லெபனானின் முன்னாள் நிதியமைச்சர் பிணையில் விடுதலை!

  • December 17, 2025
  • 0 Comments

கடந்த சில மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த லெபனானின் முன்னாள் நிதியமைச்சர்  பிணையில்  விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமின் சலாம் (Amin Salam) நேற்று $100,000 என்ற பிணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஆறு மாதங்களுக்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சலாம் மீது மோசடி மற்றும் பொது நிதியை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட   குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தனியார் காப்பீட்டு நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் அந்த […]

இலங்கை செய்தி

13,781 வீடுகள் முழுமையாக சேதம்!

  • December 17, 2025
  • 0 Comments

டித்வா புயல் தாக்கத்தையடுத்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 13 ஆயிரத்து 781 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அத்துடன், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் (101,055) பகுதியளவு சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பேரிடரால் 643 பேர் உயிரிழந்துள்ளனர். 183 பேர் காணாமல்போயுள்ளனர் என பட்டியலிடப்பட்டுள்ளது. 22 ஆயிரத்து 96 குடும்பங்கள் தொடர்ந்து 723 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

அரசியல் இலங்கை செய்தி

அவசர நிதிக்கான குறை நிரப்பு பிரேரணை நாளை சமர்ப்பிப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றம் நாளை (18) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதியை பெறுவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்காகவே விசேட சபை அமர்வு நடக்கின்றது. இதற்கமைய 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை சபையில் முன்வைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இந்த யோசனைக்கு எதிரணிகள் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளன என்று அறியமுடிகின்றது. ஜனாதிபதி வசம் நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும், நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் உள்ளமை […]

அரசியல் இலங்கை

பேரிடரால் மொத்த தேசிய உற்பத்தியில் 3 சதவீத இழப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

டித்வா புயலால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு 4 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்தார். இவர் பொருளாதார நிபுணர் என்பதுடன், நிழல் நிதி அமைச்சராகவும் கருதப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. “ உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்பே பேரிடர் இழப்பு பற்றி சரியான தகவலை குறிப்பிடலாம். எனினும், 3 முதல் 4 பில்லியன் டொலர்வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது எனது தனிப்பட்ட கணிப்பாகும். […]

ஆஸ்திரேலியா உலகம்

சிட்னி பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஷஸ் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

சிட்னி போண்டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகள் நடக்கும் பகுதிகளில் புலனாய்வாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸட் போட்டி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டில் இன்று ஆரம்பமானது. இதனைமுன்னிட்டு தெற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருந்தனர். ஆயுதம் ஏந்திய பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போட்டியை பார்வையிட வந்தவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு சமூக அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாக உளவு […]

அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டம் “அரசியல் ஆயுதமா”?

  • December 17, 2025
  • 0 Comments

அவசரகால சட்டம் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவசரகால சட்டம் அமுலாகும் விதம் தொடர்பில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ பேரிடர் காலகட்டத்தில் அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா விதங்களிலும் உதவும் வகையிலேயே மேற்படி சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அச்சட்டம் எந்த சந்தர்ப்பத்திலும் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக கையாளப்படவும் இல்லை. […]