இந்தியா செய்தி தமிழ்நாடு

காவிரியில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திற‌ப்பு

கா​விரி மேலாண்மை ஆணை​யம் தமிழகத்​துக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்​தர​விட்ட நிலை​யில், கர்​நாடக அரசு 10,000 கன அடி நீரை தமிழகத்​துக்கு திறந்​து​விட்​டுள்​ளது.

கா​விரி மேலாண்மை ஆணை​யம் தமிழகத்​துக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்​தர​விட்ட நிலை​யில், கர்​நாடக அரசு 10,000 கன அடி நீரை தமிழகத்​துக்கு திறந்​து​விட்​டுள்​ளது.

கடந்த 11-ம் திகதி நடந்த காவிரி மேலாண்மை ஆணை​யக் கூட்​டத்​தில் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என உத்​தர​விட்​டது.

இதற்கு மறுப்பு தெரி​வித்த கர்​நாடக அரசு, உச்​ச நீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​போவ​தாக தெரி​வித்​தது.

இந்​நிலை​யில் மைசூரு, மண்​டியா ஆகிய இடங்​களில் விவ​சாய சங்​கத்​தினர் நீர் திறக்​கக்​கூ​டாது என வலி​யுறுத்தி போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மண்​டி​யா​வில் போராட்​டம் நடத்​திய கன்னட அமைப்​பினரை பொலிஸார் கைது செய்​தனர்.

இந்​நிலை​யில் நேற்று மாலை 7 மணி நில​வரப்​படி, மைசூரு​வில் கடல் மட்​டத்​தில் இருந்து 2284 அடி உயரத்​தில் உள்ள க‌பினி அணை​யின் நீர்​மட்​டம் 2282.10 அடி​யாக உள்​ளது.

அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 230 கன அடி நீர் வந்​து​கொண்​டிருக்​கும் நிலை​யில், அணை​யில் இருந்து தமிழகத்​துக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்​து​விட‌ப்​பட்​டுள்​ள‌து.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி