இலங்கை செய்தி

திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து 1 வயது 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

  • January 5, 2026
  • 0 Comments

திருகோணமலையின் ஷாபி நகர்(Shabi Nagar) பகுதியில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறுதலாக விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் மூதூர்(Mudur) காவல்துறை பிரிவில் பதிவாகியுள்ளது. மாவிலாறு(Mavilaru ) அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக மூதூர் பிரதேசம் வெள்ள நீரில் மூழ்கியது. இந்நிலையில் குறித்த வீட்டுக்கு அருகில் நீர் நிரம்பி காணப்பட்ட நிலையில் அப்பகுதியில் பூ மரங்கள் தானாகவே முளைத்தன. குறித்த குழந்தை பூப்பறிப்பதற்காக நீர் நிரம்பிய பள்ளத்தை நோக்கி சென்ற வேளை தவறுதலாக விழுந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் ஆரம்பக் […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தலைமுடியை வெட்டிய 2 ஆண்கள்

  • January 5, 2026
  • 0 Comments

மத்திய வங்கதேசத்தின்(Bangladesh) ஜெனைடாவின்(Zenaida) துணை மாவட்டமான காளிகஞ்சில்(Kaliganj) 40 வயது இந்துப் பெண்ணை இரண்டு ஆண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்து அவரது தலைமுடியை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஒரு சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதான ஹசன்(Hasan) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் […]

உலகம் செய்தி விளையாட்டு

வங்கதேசத்தில் ஐபிஎல் தொடர் ஒளிபரப்ப தடை

  • January 5, 2026
  • 0 Comments

இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்(IPL) தொடரை ஒளிபரப்ப வங்கதேச(Bangladesh ) இடைக்கால அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது அண்டை நாடான இந்தியாவுடனான வளர்ந்து வரும் சர்ச்சையின் சமீபத்திய நடவடிக்கை ஆகும். வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை(Mustafizur Rahman) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(Kolkata Knight Riders) அணியிலிருந்து நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(BCCI) எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முஸ்தாபிசுர் போன்ற நட்சத்திர வீரர் தொடரில் இருந்து முறையற்ற முறையில் நீக்கப்பட்டது […]

இலங்கை செய்தி

எரிபொருள் விலைகளில் திருத்தம்

  • January 5, 2026
  • 0 Comments

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, 335 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 277 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 279 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் இந்து பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொலை

  • January 5, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) இந்து நபர்கள் மீதான தாக்குதலுக்கு மத்தியில், செய்தித்தாளின் தற்காலிக ஆசிரியரும் தொழிற்சாலை உரிமையாளருமான 45 வயது நபர் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தென்மேற்கு வங்கதேசத்தில் உள்ள ஜஷோரில்(Jashore) உள்ள மணிராம்பூர்(Manirampur) துணை மாவட்டத்தின் கோபாலியா பஜார்(Gopalia Bazaar) பகுதியில் ராணா பிரதாப் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அருவா(Arua) கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரின் மகன் பிரதாப், இரண்டு ஆண்டுகளாக கோபாலியா பஜாரில் ஒரு ஐஸ் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். சம்பவ […]

உலகம்

சீனாவின் மாய உலகம்!

  • January 5, 2026
  • 0 Comments

வடகிழக்கு சீன நகரமான ஹார்பினில் (Harbin) மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் பிரமாண்டமான  விழா ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இடம்பெறும். பல கலைஞர்கள் ஒன்றிணைந்து ஆண்டின் சிறந்த பனிச் சிற்பத்தை உருவாக்குவதற்காக போராடுவார்கள். இது ஏராளமான மக்களை ஈர்க்கும். இதுவொரு மாயாஜாலம் நிறைந்த கனவு உலகை போன்றது. இந்த விழா பிப்ரவரி நடுப்பகுதி வரை நீடிக்கும். இது தொடர்பான சில புகைப்படங்கள் மட்டும் தற்போது வெளியாகியுள்ளன.    

இலங்கை செய்தி

புகையிரத திணைக்களத்திற்கு 100 புதிய நிலைய அதிபர்கள்

  • January 5, 2026
  • 0 Comments

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் தரம் III பதவிக்காக 100 புதிய அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (05) நடைபெற்றது. புகையிரத திணைக்கள கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது இலங்கை ரயில்வே துறை, தரம் III நிலைய அதிபருக்கு 100 புதிய நியமனங்களை வழங்கியுள்ளது. புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகளும், அமைச்சின் தொழிற்சங்க ஒருங்கிணைப்புச் செயலாளர் எஸ்.பி. விதானகே உள்ளிட்ட குழுவினரும் இங்கு […]

உலகம்

ஈரானில் அதிகரித்து வரும் போராட்டம் – தப்பிச் செல்ல தயாராகும் உச்சத்தலைவர்!

  • January 5, 2026
  • 0 Comments

ஈரானில் பொருளாதார பிரச்சினையால் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் வலுவடைந்து வருகின்ற நிலையில், அந்நாட்டின் உச்சத்தலைவர் ரஷ்யாவிற்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர் புட்டினிடம் தஞ்சம் கோரியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போராட்டங்களை கட்டுப்படுத்த அந்நாட்டின் இராணுவம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஈரானில் போராட்டங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக ட்ரம்ப் எச்சரக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இராணுவமும் பாதுகாப்புப் படைகளும் போராட்டங்களை முடிவுக்குக் […]

உலகம் செய்தி

வெனிசுலாவில் ஜனநாயக மாற்றம் வேண்டும் – அமெரிக்கா பக்கமா ஸ்டார்மர்?

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் “ஜனநாயகத்திற்கு அமைதியான மாற்றத்தை காண விரும்புவதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் [Keir Starmer] தெரிவித்துள்ளார். சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “வெனிசுலாவில் நிகழ்ந்தவை மிகவும் முக்கியமானவை. ஜனாதிபதி சட்டவிரோதமாக செயற்படுவதால், நாட்டிற்கு ஜனநாயக மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை நாங்கள் நீண்ட காலமாக ஆதரித்து வருகிறோம். சர்வதேச சட்டம் நாட்டின் எதிர்காலத்திற்கு நங்கூராக இருக்க வேண்டும். அமெரிக்கா எடுக்கும் […]

இலங்கை செய்தி

ட்ரம்புக்கு எதிராக போராட்டம்: கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை கண்டித்து கொழும்பில் இன்று (05) மாலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட மக்கள் போராட்ட இயக்கத்தினரால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடதுசாரி அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். வெனிசுலா இறையாண்மைமிக்க சுதந்திர நாடெனவும், அதன்மீதான ஆக்கிரமிப்பு மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி கைது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். போரை உருவாக்கி, எண்ணைவளத்தை கொள்ளையடிக்க முற்படுகின்றனர் எனவும் […]